Sunday, December 30, 2007

எந்த அறிவுத்திறனும் இல்லாத தமிழர்கள் உடல் உழைப்பை நம்பி வாழ்ந்த உழைப்பாளிகள் அடிமைகளாக பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு அந்த நாடுகளில் இரண்டாம் தர குடிமக்களாக உரிமை மறுக்கப்படுகிற கொடுமை அந்த காலத்தில் நடந்தது. இன்றோ மிகுந்த அறிவுத்திறன் கொண்ட கணினி அறிஞர்கள் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்துதானே நாடு கடத்தப்படுகிறார்கள். இன்று மரியாதையுடன் அழைத்து செல்வார்கள் பின் அடிக்காத குறையாக விரட்டுவார்கள். இதுபோல ஏழைகளின் வரி பணத்தில் நாட்டை விட்டு ஓடுவது இந்த தேசத்திற்கு இழப்பா இல்லையா?

செயலலிதா திமுக அரசியல் லாபம் பெற்றுவிடக்கூடாது என்பதற்காக இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டி திட்டத்தை எதிர்த்தாலும் அந்த பணத்தை கல்விக்காக பயன்படுத்த வேண்டும் என்ற யோசனையில் தவறேதும் இல்லை

கோடிக்கணக்கில் வரி பனத்தை பள்ளி, கல்லூரி, பல்கலைகழகங்களை நிர்வகிக்க அரசு செலவு செய்கிறது. ஆண்டுதோறும் பல லட்சம் இளைஞர்கள் பட்டப்படிப்பு முடித்து வெளியே வருகிறார்கள். இவர்களின் திறமைக்கொரு வேலை கொடுத்து பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றால் நட்டம் யாருக்கு? வேலையில்லா பட்டதாரி மற்றும் அவர் குடும்பத்திற்கும் மட்டுமல்ல இழப்பு அரசுக்கும் இதனால் பெரும் இழப்பு என்பதை ஆள்வோர் காதில் யார் ஓதுவது?

டாட்டாவின் கனவுத்திட்டமான ஒரு லட்சத்தில் கார் திட்டம், கார் தயாராகும் முன்பே நந்திகிராமில் பலரை கொண்று குழியில் போட்டுவிட்டது. இன்னும் இந்த கனவு நனவாகி ஒரு வேளை ஓடத்துவங்கும் போது இன்னும் எத்தனை போரை கொல்லுமோ?

எங்கட நாட்டுக்காக நாங்களே போராடிக்குறோம் ன்னு சொல்ற ஈழத்தமிழ் மக்கள் போல எங்களுக்கான தேவையை நாங்களே பூர்த்தி செய்ய உழைப்போம். அந்நிய முதலாளிகளை நாட்டுக்குள் அனுமதியோம்னு , 8 கோடி தமிழன்ல எவனாவது சொல்றோமா? எந்த அரசியல் நாயாவது சொல்லுதா? ஏன்னா அவனுங்ககிட்டதானே இவனுங்க கையேந்துறானுங்க..அமெரிக்கன் கிட்ட கையேந்துற புத்தியை விடும் வரை இந்தியா வல்லரசும் ஆகாது ஒரு புன்னாக்கும் ஆகாது.

சும்மா கெடந்த சங்க ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி; இந்த கருணாநிதி மதுரை வானூர்தி நிலையத்துக்கு தேவர் பேர வப்பேன்னு சொல்ல, டாக்டர் கிருஷ்ணசாமி இம்மானுவேல் பேர வக்கனுமின்னு போராட்டம் நடத்துறதும், இந்த பிரச்சனை மறுபடி வெடிக்கும் போல இருக்குதே!

பொய்யும் புரட்டும் நிறைந்தவன் கல்வி நாட்டை கெடுக்கும்

பேசிடும் அன்பு செயல்முறையானால் பேரிண்பம் வேறெது உலகில்.

நேசமும் அன்பும் நிலையாக வேண்டும் நேர்வழி வேண்டும் உலகில்

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வே.

சண்டைகள் தீர்ந்தே மனிதர்கள் சேர்ந்தால் தாரனியில் அது புதுமை.

உண்மை தெரிந்தால் தன்னை உணர்ந்தால் ஓடி மறைந்திடும் மடமை.

ஏட்டில் படித்ததோடு இருந்துவிடாதே, நாம் ஏன் படித்தோம் என்பதையும் மறந்துவிடாதே.

தன்மாணமில்லா கோழையுடன் சேரக்கூடாது.

அறிவு வளர்ச்சியில் வான்முகட்டை தொட்டிடவேண்டும்.

தனியுடமை கொடுமைகள் தீர புரட்சி செய்யடா.

உள்ளத்தில் ஒரு கள்ளமில்லாமல், ஊருக்குள்ளே பல பேதம்கொள்ளாமல் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.

ஜாதிகள் யாவும் ஒன்றாக மாறும் தேதியில் தோன்றும் பெருமை.

தில்லில்லா மனுசனுக்கு பல்லெல்லாம் நல்லாருக்கு, சொல்லெல்லாம் விஷமிருக்கு கேளுங்கோ.

பொறக்கும்போது பொறந்த குணம் போக போக மாறுது.

குள்ளநரி மாட்டிக்கிட்டா குறவனுக்கு சொந்தம்.

நண்பர்கள்(ளாக) போலே வாழ்வதற்கு மாலையும் மேளமும் தேவை என்ன?

இருக்கிற கோயிலையெல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்.

உழைப்பவன் காலை முத்தமிடும் உத்தமர் வாழ்வை குத்திவிடும்.

உழைப்பவன் கையில் ஓடு தரும், உணவுக்கு பதிலாய் நஞ்சை தரும்.

உதட்டில் மக்கள் பற்றும் உள்ளத்தில் பணப்பற்றும் கொண்டவன்.

பொருள் இருந்தால் வந்து கூடும், அதை இழந்தால் சிதறி ஓடும்.

மெய்யய்யை பொய்யாய் மாற்றிவிடும், வீடே சிறையாய் பூட்டிவிடும்.

தமிழ்நாட்டை அடிமையாக்கிவிட்டு நாம் காசு சேர்ப்பது சுதந்திரமா? இது தாயை கூட்டிக்கொடுத்து காசு சேர்ப்பதற்கு சமமான நெருடலை ஏற்படுத்தவில்லையா?

வானமறிந்தததனை அனைத்துமறிந்து வளர்மொழி எம்மொழி.

No comments: