Monday, January 28, 2008

கல்லூரி மானவர்கள் உள்ளே கவனமாக ஓட்டவும்

தருமபுரி பேருந்து எரிப்பு சம்பவத்தின் நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு வந்துள்ள அரசு உத்தரவு. அனைத்து கல்லூரி மற்றும் பள்ளி பேருந்துகளில் அந்தந்த கல்வி நிறுவனத்தின் பெயர் விள்ம்பர நோக்கத்துடன் எழுதப்பட்டிருக்கிறது. இப்போது எதற்காக இந்த புதிய உத்தரவு? கல்லூரி மானவர்கள் என்று எழுதப்படுவதால் அவர்களின் உயிர்களுக்கு மற்றவர்களை காட்டிலும் அதிக முக்கியதுவமோ, எச்சரிக்கையோ இருக்கவேண்டுமானால் மற்றவர்களை பற்றி அரசுக்கு அக்கறை இல்லையா? குழந்தைகளுக்கு விபத்து நேர்ந்தால் உயிரிழப்பு நேரிடும் வாய்ப்பு அதிகம் என்பதால் ஒரு அதிகபட்ச அக்கறை காட்டலாம், ஆனால் மாநகர பேருந்துகளில் படிகட்டுகளிலும், ஜன்னல்களிலும் மேற்கூரையிலும் தொங்கிகொண்டு போகும் கல்லூரி மானவர்களுக்காக யார் என்ன செய்யமுடியும்? இவர்களால சக பயணிகளுக்கு தொல்லை ஏற்படாமல் இருந்தாலே போதும். கருனாநிதி கல்லூரி மானவர்களின் அனுதாபத்தை தேடிக்கொள்ளவே இந்த முக்கியத்துவ உத்தரவை பிறப்பித்திருக்கிறது.

கார் கண்ணாடிக்கு சன் புரட்டக்ஷன் பிலிம்

வெயில் காலங்களில் வெயில் தடுப்பு இழைகள் ஒட்டப்படுவது சூரியனின் வெப்பத்திலிருந்து காத்துக்கொள்ள அவசியமாகிறது. இதனால் சமூக குற்றங்களும், தகாத செயல்களும் நடக்கிறதாம். என்னய்யா உத்தரவு இது? இனி எல்லோரும் வெயிலில் தான் காயவேண்டும். உழைப்பாளில் வெயிலில் வேலை செய்யவில்லையா என்று கேட்கலாம், உழைப்பாளிகள் வெயிலில் வேலை செய்வதால் வசதியிருந்தும் வெயிலில் காயவேண்டும் என்பது என்ன நியாயம்? அனைவருக்கும் மகிழுந்து கிடைக்கவேண்டும் என்றால் நியாயம். அனைவரும் வெயிலில் காயவேண்டும் என்பது நியாயம்?

மாநில தாயை வணங்கிடும் என்போம்-பாரதி

மாநில தாயை வணங்கிவிட்டு எதற்கு வந்தே மாதரம் என்பது?

தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.

எத்தனை உணமை. தெய்வம் கொடுக்காததைக் கூட உழைப்பு தரும். கடவுள் இருந்தால் தானே கொடுக்க. உழைப்பு இருந்தால் தான் எதுவுமே கிடைக்கும். தெய்வத்தால் ஒரு நன்மையும் இல்லை

No comments: